--- --:--:-- --

சென்னையில் விரைவில் இரண்டு அடுக்கு மேம்பாலம்..!

PTI25-07-2020_000092B

PTI25-07-2020_000092B

துறைமுகத்திலிருந்து மதுரவாயில் வரையிலான ஈரடுக்கு பாலம் அமைப்பதற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு வழங்கியுள்ளது.

 

துறைமுகத்திலிருந்து மதுரவாயில் வரையில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மாதமே கையெழுத்தானது. இதன்படி 5,800 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் மதுரவாயில் இடையே பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

இதில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைய உள்ளது. கீழடுக்கில் உள்ளூர் வாகனங்களும், மேலிடத்தில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் பயணிக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளது.

 

இந்த பறக்கும் சாலை நான்கு பகுதிகளாக கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பாலப் பணிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஒப்புதலை மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு வழங்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon