7 கோடி இன்சூரன்ஸ்காக நடந்த கொலை..!
இன்ஷூரன்ஸ் தொகை ஏழு கோடி ரூபாய் பெறுவதற்காகவா விபத்தில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய தெலுங்கானா மாநில அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வெங்கடாபுரத்தை சேர்ந்த தர்மநாயக் ஹைதராபாத்தில் உள்ள மாநில தலைமை செயலகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஒரு கோடியே 25 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனை ஈடுகெட்ட குடும்பத்தோடு அமர்ந்து யோசித்து தனது பெயரில் புதியதாக காப்பீடு எடுத்தார்.
இந்த நிலையில் ஜனவரி 9ம் தேதி விபத்தில் கார் தீப்பிடித்து எறிந்தது. இறந்துவிட்டதாக அவரது மனைவி தெரிவித்ததோடு அவரது பெயரில் காப்பீட்டு தொகையை பெறவும் முயற்சி செய்து வந்தார். அவரது மனைவிக்கு போன் செய்து சில தகவல்களை பரிமாறியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் தர்மா போன்ற ஒருவரை காரில் வைத்து கொளுத்தி விட்டு நாடகம் ஆடியது தெரிய வந்ததால் பதுங்கியிருந்த தர்மா அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மனைவியின் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





