--- --:--:-- --

ஜனவரி 18ம் தேதி விடுமுறை! தமிழ்நாடு அரசு திடீர் அறிவிப்பு..!

3

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வண்ணக் கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொம்பு செடியை கட்டி மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வருகிற 17ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

மீண்டும் 18ம் தேதி பள்ளி கல்லுாரிகள் திறக்கப்பட இருந்தன. அதேப் போல் அரசு தரப்பில் வரும் 17ம் தேதி வரை பள்ளிக் கல்லுாரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இதற்கிடையே தமிழர் திருநாளை கருத்தில் வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என்று அனைவருக்கும் 4 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

 

இதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் விதமாக ஜனவரி 18ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்து உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon