மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..5 பேர் கைது..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரியில் பயிலும் மாணவனும், மாணவியும் புறவழிச் சாலையில் வியாழன் அன்று மாலை தனித்தனியே சந்தித்து பேசி உள்ளனர். அப்போது மது போதையில் இருந்த ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது.
இருவரின் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டிய அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
டிஎஸ்பி ஜூனியர் சீசன் தலைமையில் தனிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன், விமல், சிவகுமார், தென்னரசு, விக்னேஷ் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





