ஆசிரியரின் மண்டையை உடைத்த +2 மாணவர்..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிறுத்தம் அருகே அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் அந்த பள்ளியில் 33 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர் கலையரசன் என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்தப் பள்ளியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கேலி செய்துள்ளார். அந்த சம்பவம் குறித்து ஆசிரியர் மானாமதுரை காவல் நிலையத்தில் அப்போது புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி பிரச்சனையை சமூகமாக முடித்து வைத்துள்ளனர். இப்படி இருக்க நேற்று அந்த மாணவர் ஆசிரியர் கலையரசனை பள்ளி வளாக கேட்டிற்கு முன்பாக கட்டையால் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில் பலத்த காயம் அடைந்த கலையரசன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர் கலையரசன் மானாமதுரை காவல் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




