மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்- சிஆர்பிஎப் ஜவான்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎப் ஜவான்கள் மீது மாவோயிஸ்டுகள் வெறித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தினர். மாவோயிஸ்டுகளான மோதலின் போது கண்ணிவெடியில் சிக்கி நமது சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தியாவில் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவோம் என்பது மாவோயிஸ்டுகளின் கொள்கை. நாட்டின் பல மாநிலங்களில் ஒருகாலத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதங்கள் மூலம் செல்வாக்கு செலுத்தி வந்தனர். மாவோயிஸ்டுகளின் பிரதான கேடயமாக பழங்குடி மக்கள்தான் இருந்து வந்தனர்.
ஆனால் மாவோயிஸ்டுகளின் புகலிடமாக இருந்த மலைப்பகுதிகள், பழங்குடி வாழ்விடங்களுக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் சென்று சேர்ந்தன. இதனால் இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டமே பெருமளவு குறைந்துவிட்டது.
மாவோயிஸ்டுகள் பெருமளவு ஒடுக்கப்பட்டுவிட்டனர். ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களின் மலைகளில்தான் தற்போது மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




