--- --:--:-- --

மருத்துவர் இல்லாமல் பிரசவம் பார்த்த செவிலியர்கள் – இறந்து பிறந்த குழந்தை

5

திருவெறும்பூர் அருகே செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்ரீநிதி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

மருத்துவர் பணிக்கு வராத நிலையில் அங்கிருந்து இரண்டு சிறுமிகள் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் செவிலியர்கள் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்து போனதாக கூறி உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon