ஜனவரி 1 முதல் சிலிண்டருக்கு ரூ.100 மானியம்..?
மத்திய அரசால் ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு சேமிக்க இருப்பதால் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல், டீசல் மானியத்தை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு டிசம்பர் வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ அரிசியில் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசியில் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பால் தமிழக அரசு ஆயிரம் கோடி வரை சேமிக்க உள்ளது என்றும் இனியும் காலம் தாழ்த்தாமல் வரும் ஜனவரி முதல் பெட்ரோலுக்கு இரண்டு ரூபாயும், டீசலுக்கு நான்கு ரூபாயும் வீட்டு உபயோக சிலிண்டருக்கு 100 ரூபாயும் மானியம் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை திமுக அரசினர் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





