--- --:--:-- --

மனைவி நடத்தையில் சந்தேகம்..உதைத்ததால் ஏற்பட்டு அதிக உதிரப்போக்கு..விபரீதம்..!

10

விழுப்புரம் அருகே தம்பதிக்கு இடையே நடந்த தகராறில் கருவுற்ற மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து உயிரிழப்புக்கு காரணமான இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் தண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த பாரதி என்ற பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

 

இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். அதையடுத்து செல்வ பாண்டி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். பெண் கருவுற்ற நிலையில் மனைவி மீது சந்தேகம் அடைந்த அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

தம்பதிக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த செல்வ பாண்டி அவர் பாரதியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். அதில் அதிக உதிரப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். இதனால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon