திருஷ்டி சுற்றுவதாக கூறி பெண்ணிடம் பணத்தை திருடிய திருநங்கைகள்..!
சென்னை பாலவாக்கத்தில் திருஷ்டி சுற்றுவதாக கூறி பணத்தை திருடி சென்ற இரண்டு திருநங்கைகள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யமுனா என்பவரிடம் திருஷ்டி சுற்றி தருவதாக கூறி மணிபர்சை வாங்கிய இரண்டு திருநங்கைகள் திருஷ்டி சுற்றுவது போல் நடித்து பர்சில் இருந்த 2000 ரூபாயை திருடி கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளனர்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பணத்தை திருடிய 2 திருநங்கைகள் ஒரு ஆட்டோ ஓட்டுனர் உட்பட நான்கு பெயரை கைது செய்ததோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





