ஐந்து நாட்களாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த இறந்தவர் உடல்..!
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே சுமார் ஐந்து நாட்களாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த இறந்தவரின் உடலை அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் வருவாய் துறையினர் மீது அடக்கம் செய்தனர்.
நவநீதகிருஷ்ணன் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் அவரது மனைவியின் உடலுக்கு அருகே அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த இடத்திற்கு பத்திரப்பதிவு நடைபெறாமல் இருப்பதால் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் புகாரின் பேரில் வந்த போலீசார் தாமிரபரணி ஆற்றங்கரையில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





