பால தடுப்பு சுவர் மீது மோதி உயிரிழந்த மாணவன்..!
மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பால தடுப்பு சுவர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார்.
இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கலை கல்லூரியில் படித்து வந்த நிலையில் கல்லூரி முடிந்து இருசக்கர வாகனத்தில் மாலை வீடு திரும்பியுள்ளார். நடுபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த பொழுது மாணவரின் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை
இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது.
இதில் 20 அடி தூரம் வரை கீழே தூக்கி வீசப்பட்ட தினேஷ்குமார் படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





