பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவில் அழுகிய முட்டை..!
சாயல்குடி அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 320 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மத்திய உணவில் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட இருந்த முட்டைகளை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





