--- --:--:-- --

புயல் காரணமாக சரிந்து விழுந்த சிக்னல்..போக்குவரத்து பாதிப்பு..!

13

சென்னை தங்க சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் சாய்ந்துள்ளது. தங்க சாலையில் காற்றின் வேகத்தால் புதிதாக அமைக்கப்பட்ட சிக்னல் கம்பம் விழுந்தது. மாண்டஸ் புயல் கடக்கின்ற வேலையில் சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது.

 

எனவே காற்றின் வேகத்தால் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தங்க சாலை போக்குவரத்து சிக்னல் சரிந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இணைந்து சிக்னலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon