--- --:--:-- --

பெற்ற மகள்களை தீ வைத்து எரித்த தாய்..!

20

ந்திர மாநிலம் செந்தூரில் கணவன் கைவிட்ட விரக்தியில் இரண்டு பெண் குழந்தைகள் எரிந்த நிலையில் தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள மலைப்பகுதியில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். அதில் ஒரு பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

 

பின்னர் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். தகவலின் பேரில் வந்தபோது படுகாயம் அடைந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உடன் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினார்.

 

அப்பொழுது அவர் ஜோதி என்பதும் கணவர் விட்டு சென்றதால் வாழ்க்கையை நடத்த முடியாமல் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon