லிவிங் உறவில் இருந்து விட்டு காதலி செய்த அதிர்ச்சி சம்பவம்..!
சேலத்தில் லிவிங் உறவில் இருந்த பெண் காதலனிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த இளைஞர் பெங்களூர் பணியாற்றிய பொழுது அங்கு கீதா என்ற பெண்ணை காதலித்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் லிவிங்கிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த விவகாரத்தை தன் பெற்றோருடன் கூற இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்துள்ளது. திருமணத்திற்காக சேலத்திற்கு அழைத்து வரப்பட்ட கீதா திடீர் என இளைஞரின் தாயை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
அப்பொழுது வாக்குவாதத்தின் பொழுது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய பொழுது குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்ற பார்ப்பதாக கீதா குற்றம் சாட்டினார்.
பல்வேறு ஆண்கள் உடன் கீதா வீடியோ கால் பேசி செல்போனில் ஸ்கிரீன்ஷாட் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் பெங்களூருவிற்கு சென்று விடுவதாகவும் இல்லை என்றால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என கீதா மிரட்டுவதால் இளைஞரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





