நகைச்சுவை நடிகர் சிவநாராயண மூர்த்தி காலமானார்..!
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சிவ நாராயணமூர்த்தி சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
பிரபல நகைச்சுவை நடிகரான விவேக் மற்றும் வடிவேலு உடன் பல்வேறு நகைச்சுவை காட்சிகளை நடித்து பிரபலமான இவருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இறுதி சடங்கு சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





