காப்பகத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிய ஆறு சிறுமிகள்..!
Silhouette of six young women, walking hand in hand
ஈரோடு அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய சிறுமி உட்பட ஆறு பேர் தப்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலையில் ஆர்.என்.புதூர் எனும் இடத்தில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் சுமார் 50 பெண் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் துணி துவைப்பதாக கூறி சென்ற ஏழு பேரில் 6 சிறுமிகள் சுவர் ஏறி குதித்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர்களை தேடி சென்று அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஆறு பேரையும் மீண்டும் காப்பகத்திற்கு அழைத்து வந்தனர்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது காப்பகத்தில் இருக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என சிறுமிகள் கூறியதாக தெரிகிறது. அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





