புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி..!
பொன்னமராவதி அருகே புதிதாக கட்டப்பட்ட பகுதி நேர நியாய விலைக் கடையை சட்டப்பேரவை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நியாய விலை கடையை கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் அடிப்படையில் கட்டப்பட்ட புதிய கட்டிடததை அமைச்சர் திறந்து வைத்ததோடு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வின் பொழுது மாவட்ட நிர்வாகி அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





