கர்ப்பமான ஐம்பது நாளில் ஏற்பட்ட வலி திருமணம்…மூன்று மாதத்தில் உயிரிழந்த கர்ப்பிணி..!

பாபநாசம் அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அண்டகுடி கிராமத்தை சேர்ந்தவர் அஜித் குமார்.

 

இவருக்கும் குரு லட்சுமி என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த குரு லட்சுமி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவர்கள் பலரை நாடியும் பலனளிக்காததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்கொலைக்கும் முன் அவர் வாக்குமூலம் அளித்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.