--- --:--:-- --

திமுக ஆட்சியில் கால்நடைத்துறை பணியாளர் பற்றாக்குறையால் தள்ளாடுகிறது : பழனிசாமி

23

திமுக ஆட்சியில் கால்நடைகளுக்கான மருந்துக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் கால்நடை துறைக்காக வகுக்கப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கும் பழனிச்சாமி தற்பொழுது திமுக ஆட்சியில் கால்நடை துறையில் பணியாளர் பற்றாக்குறையால் தள்ளாடுகிறது என விமர்சித்தார்.

 

மாடுகளுக்கு வேண்டிய மருந்துகளை இதுவரை வாங்காததால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவில்லை எனவும் இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் மாடுகளுக்கு நாக்கிலும் வாயிலும் அம்மை நோய் தாக்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன எனவும் தெரிவித்தார்.

 

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அலுவலர்களுக்கும் மருந்துகளைக் கொண்டு சேர்ப்பதில்லை, கால்நடைகளுக்கும் கொள்முதல் செய்வதில்லை, இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என பழனிசாமி கூறியுள்ளார்.

 

எனவே திமுக அரசு இனியாவது விழித்துக் கொண்டு கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை உடனடியாக செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon