ஆதாரை இணைக்க மின்வாரியங்களில் சிறப்பு முகாம்..!
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வருகிற திங்கள் கிழமை முதல் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
பண்டிகை தினங்கள் தவிர்த்து அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் 31ம் தேதி வரை ஏற்கனவே உள்ள நடைமுறையின் படி மின்கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





