விரைவில் அனைத்து பேருந்துகளிலும் ஒலிபெருக்கி சேவை : உதயநிதி
சென்னையில் மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக பேருந்து நிறுத்தம் குறித்த ஒலிபெருக்கி செயலியை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதிய ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு முன்பாக 300 மீட்டர் தூரத்திலேயே நிறுத்தங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பேருந்தின் உட்புறத்தில் ஆறு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 150 மாநகர பேருந்துகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்லடம் சாலையில் இருக்கும் மத்திய பணி மனையில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பேருந்துகளின் சேவையை அமைச்சர்கள் சிவசங்கர் சேகர பாபு, எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உரையில் ஒலிபெருக்கி சேவை மக்களுக்கு பயன்படும் என்று அனைத்து பேருந்துகளிலும் இந்த சேவையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




