--- --:--:-- --

பேருந்தில் இன்ஜின் கழன்று விழுந்ததால் நடுவழியில் சிக்கி தவித்த மக்கள்..!

30

தர்மபுரி அருகே பழுதடைந்த அரசு பேருந்தை பொதுமக்கள் தள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தர்மபுரி மாவட்டம் அரிலூரில் இருந்து அம்மாபேட்டைக்கு சென்ற பேருந்தில் கியர் இன்ஜின் விழுந்துள்ளது.

 

அப்பொழுது ஓட்டுநர் பேருந்தை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து பழுதடைந்த பேருந்து அங்கிருந்து பொதுமக்கள் தள்ளி சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர்.

 

பின்னர் இரும்பு கம்பிகளை கொண்டு திடீரென சரி செய்த பின்னர் பேருந்து இயக்கப்பட்டது. இதுபோன்ற பேருந்துகளை பழுது பார்த்து பின் இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon