தமிழறிஞர் ஔவை நடராஜன் காலமானார்..!

வை நடராஜன் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஔவையார் குப்பம் கிராமத்தில் 1936 ஆம் ஆண்டு பிறந்த ஔவை நடராஜன் தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.

 

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் துணை இயக்குனர் தலைமுறை செயலகத்தின் மொழிபெயர்ப்பு துறையினர் இயக்குனர், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை அரசு செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றினார்.

 

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். டெல்லியில் உள்ள அகில இந்திய வானிலை மையத்தின் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் ஔவை நடராஜன் பணியாற்றியுள்ளார்.

 

ஸ்ரீ கலைமாமணி உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். ஔவை நடராஜன் வயது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நடராஜன் நேற்று இரவு காலமானார். இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.