--- --:--:-- --

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸ் காலமானார்..!

3

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. ஆயிரத்துக்கு அதிகமான திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி புகழ்பெற்ற ஆரூர்தாஸ் சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தார்.

 

வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை தனது இல்லத்தில் காலமானார். ஆரூர் தாசின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. ஆரூர் தாசின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கருணாநிதி, கலைமாமணி விருது பெற்றவர் என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.

 

கலைஞரின் பெயரிலான கலைத்துறை தீர்த்தக்கரை ஆரூர் தாசுக்கு தான் வழங்கியதை ஸ்டாலின் நினைவு கூர்ந்து உள்ளார். ஏசுதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் தான் பிறந்த திருவாரூரில் இணைத்து ஆரூர் தாஸ் என்ற பெயரை மாற்றிக் கொண்டார்.

 

1959 ஆம் ஆண்டு வாழவைக்கும் தெய்வம் படத்திற்கு கதை வசனம் எழுதி, திரை உலகில் அறிமுகமானார். அப்பொழுதைய உச்ச நட்சத்திரங்களான எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரின் அன்பே வா, வீட்டுக்காரன், பாசமலர், தெய்வமகன், புதிய பறவை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு  தாஸ் எழுதிய வசனங்கள் சாகா வரம் பெற்றவை. ஜெமினி கணேசன் நடித்த பெண் என்றால் திரைப்படத்தை இயற்றியவர்.

 

அறிஞர் அண்ணா, கருணாநிதி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட தங்களின் அனைத்து பிரபலங்களின் அன்பிற்குரியவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon