--- --:--:-- --

தமிழக கர்நாடக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்..!

4

கர்நாடகா ஆட்டோ வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் அம்மாநிலத்தை இணைக்கும் எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

நீலகிரி மாவட்டத்தில் தமிழக கர்நாடக எல்லையான காக்க நல்லா சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சோதனை. சாவடியிலும் வாகனத் தணிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தமிழக காவல்துறையினர் சோதனையிட்ட பிறகு அனுமதிக்கப்படுகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon