டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இன்று நடைபெறுகிறது..!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணிகளுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவியாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு 92 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வின் அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. இதில் 92 பணியிடங்களுக்கு மொத்தம் மூன்று லட்சத்தை 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத உள்ளனர். 38 மையங்களில் காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




