--- --:--:-- --

நாடு முழுவதும் சுங்கச்சாவடியில் 40 சதவீதம் கட்டணம் குறைப்பு..!

7

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 40 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் 60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 

நாடு முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப் பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகள் மூலமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி வருகிறது.

 

இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வணிகர்கள் கனரக வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்குமாறு திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர்கள், மத்திய அமைச்சர், நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்த கோரிக்கை தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினருக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். அவர் தேசிய நெடுஞ்சாலைகளின் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும். சுங்கச்சாவடி கட்டணத்தை நாற்பது சதவீதம் குறைக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும் 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார். இந்த அளவில் சாலை பணியாளர்களின் சுமையை குறைக்க உதவிடும். இந்த முடிவிற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon