--- --:--:-- --

ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசி வெட்டி படுகொலை..!

2

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே பெட்ரோல் குண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டார். ஊராட்சி மன்ற தலைவராக வெங்கடேசன் என்பவர் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு அவரது தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரிகிறது.

 

இதனையடுத்து ராகவேந்திரா நகர் பாலம் அருகே வெங்கடேசன் வந்த பொழுது அங்கு மறைந்திருந்த கும்பல் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்து கீழே விழுந்தவரை வீச்சருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு அந்த கும்பல் தப்பியடி உள்ளது.

 

சமவெளிடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல்துறையினர் வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊராட்சியில் பதற்றமான சூழல் நிலவுவதால் 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon