நோயால் முன்னாள் கணவருடன் மீண்டும் இணையும் சமந்தா..?
நடிகை சமந்தாவிற்கு அரிய வகை நோயால் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு படத்திற்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை கூட சமந்தா வெளியிட்டிருந்தார். விரைவில் சமந்தா குணமடைவார் என்று ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை சமந்தாவை அவருடைய முன்னாள் கணவர் நாகசைதன்யா மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்ய பேச்சு வார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




