--- --:--:-- --

போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதம் இன்று முதல் நடைமுறை..!

1

மிழ்நாட்டில் போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அவற்றுக்கான அபராதங்கள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

இதன்படி ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் வாகன ஓட்டிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகன பந்தயத்தில் ஈடுபட்டால் முன்னர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

இப்பொழுது அது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் முன்னர் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இப்பொழுது அது 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது.

 

சீட் பெல்ட்டை போடாமல் காரை ஓட்டினால் முன்னர் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இப்பொழுது அது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் இதுவரை 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது தற்போது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் இதுவரை ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இது 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உரிமம் இல்லாத வாகனங்களை இயக்கினால் ஆயிரம் ரூபாயாக இருந்த அபராதம் தற்பொழுது 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

ஆர்சி புக் எனப்படும் வாகன பதிவு ஆவணம் இல்லாவிட்டால் ஆயிரம் ரூபாயாக இருந்த அபராதம் தற்போது 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களுக்கு குறைந்தபட்ச அபராதமாக இருந்த 100 ரூபாய் தற்பொழுது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon