--- --:--:-- --

மல்லிகார்ஜுனை கார்கே தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகம் பெறும்..!

4

சோனியா காந்தி புதிய தலைவர் மல்லிகார்ஜுனை கார்கே தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகம் பெறும் என நம்புவதாக தெரிவித்தார்.

 

புதிய காங்கிரஸ் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்று புகழாரம் சூட்டிய சோனியா காந்தி சாதாரண தொழிலாளியாக இருந்து தனது கடின உழைப்பால் இவ்வளவு தூரத்திற்கு உயர்ந்திருப்பது தனக்கு மிகப்பெரிய திருப்தியாக உள்ளது என்று கூறினார்.

 

காங்கிரஸ் கட்சி பல்வேறு சவால்களை எதிர் கொண்டுள்ளது எனவும் அனைத்தையும் ஒற்றுமையாக எதிர்கொண்டு முன்னேற்ற பாதையில் சென்று வெற்றி பெறுவோம் எனவும் சோனியா காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் தலைவராக தனது கடமையை தன்னால் இயன்றவரை செய்ததாகவும் சோனியா காந்தி கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon