போதை பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை..!
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் போதை பழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை ஆவடி ஆணையர்கள் பங்கேற்று போதை பொருள் கடத்தல் காரர்கள் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே கடந்த மாதம் அனைத்து மாவட்ட ஐபிஎஸ் மற்றும் அதிகாரிகளுடன் இது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியிருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




