--- --:--:-- --

அரசு கல்லூரியில் மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிப்பு..!

7

நன்னிலம் அரசு கல்லூரியில் பல மாத மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவிகள் அவதி அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

 

இந்த கல்லூரி நிர்வாகம் பல மாதங்களாக மின் கட்டணம் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் மாணவ மாணவிகள் அவதி அடைந்தனர். மதியத்துடன் வகுப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon