--- --:--:-- --

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட வாய்ப்பு..!

1

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி திரட்டிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்ய நாட்டின் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கட்சிக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.

 

இந்நிலையில் கட்சி தொண்டர்களுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். அணிவகுப்பு நடக்கும் பட்சத்தில் அவரை கைது செய்ய பிரதமர் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டின் மீது முறைகேடு வழக்கில் முக்கிய நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon