--- --:--:-- --

ஆற்றில் மிதந்து வந்த அட்டை பெட்டிக்குள் இருந்து 500 ரூபாய் கட்டுகள்..!

5

ஆற்றில் மிதந்து வந்த அட்டை பெட்டிக்குள் இருந்து 500 ரூபாய் கட்டுகளை பார்த்து குளிக்க சென்ற ஒருவர் திகைத்துப் போய் உள்ளார். திருவனந்தபுரம் அருகே ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள ஆற்றில் ஒருவர் இன்று காலை 8 மணியளவில் குளிக்க வந்துள்ளார்.

 

குளிக்க வந்த பொழுது இரண்டு அட்டை பெட்டிகள் ஆற்று தண்ணீரில் மிதந்து வந்துள்ளது. அவர் அருகில் உள்ள ஒருவரிடம் கத்தியை வாங்கி நகை பெட்டியை திறந்துள்ளார். அதற்குள் நூறு ரூபாய் தாள்களை கண்டு ஆச்சரியமடைந்தார்.

 

ஒரு சில வினாடிகளிலேயே அவருடைய முழு சந்தோஷத்தையும் நோட்டுகளில் எழுதி இருந்த வார்த்தைகள் பறித்துக்கொண்டது. நோட்டுகள் படப்பிடிப்புக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட போலி நோட்டுகள் என்பது எழுதியிருந்தது. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon