--- --:--:-- --

சிக்கன் ரைஸ் வர தாமதமானதால் தகராறு..!

8

சிக்கன் ரைஸ் வர தாமதமானதால் கடையில் இருந்த நபர்களை தாக்கிய சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் தெருவில் இருக்கும் பாஸ்ட்புட் கடைக்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பல் சிக்கன் ரைஸ் வர தாமதமானதால் கடையில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர்களை கத்தியால் வெட்ட முயன்றது தெரியவந்தது.

 

கடையின் உரிமையாளர் கார்த்திக் அளித்த புகாரின்பேரில் கடையில் தகராறு செய்த 4 நபர்களையும் 14 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon