குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையின் கழுத்தை அறுத்த மகன்..!
சென்னை அமைந்தகரையில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையின் கழுத்தை அறுத்த மகன் போலீசில் சரணடைந்தார். அண்ணாநகரை சேர்ந்த ஷாகுல் ஹமீது என்பவருக்கு மனைவி மற்றும் சதாம் உசேன் என்ற மகன் உள்ளனர்.
தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் மனைவி மகன் ஆகியோரை அடித்து உதைத்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சாகுல்ஹமீது தனது மகன் மற்றும் மனைவியுடன் குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சதாம் உசேன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது தந்தையின் கழுத்தை அறுத்து விட்டு அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





