--- --:--:-- --

துணை இயக்குனரை தாக்கிய நடிகர் நவீன்..!

4

இதயத்தை திருடாதே தொடர் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகர் நவீன். மிஸ்டர் லோக்கல், பூலோகம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

 

இந்த சீரியல் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் நவீன் துணை இயக்குனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் நடைபெற்று வந்தது. நடிகர் நவீன் மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் படப்பிடிப்பு தளத்திற்கு வர தாமதமானதால் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை உதவி இயக்குனர் குணசேகரன் அவரை அழைத்து சென்றுள்ளார்.

 

அப்போது நவீன் தகாத வார்த்தைகளால் பேசி, திட்டி அடித்ததாகவும் இதனால் தனக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் குலசேகரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இரு தரப்பையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

சங்கத்தின் மூலம் பேசிக் கொள்வதாக அங்கிருந்து இருதரப்பினரும் கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. பிரபல சீரியல் நடிகருக்கும் துணை இயக்குனருக்கும் இடையே நடந்த சம்பவம் சீரியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon