கல்லணை கால்வாய் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்..!
தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். திருவாரூரில் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள் கல்லணை கால்வாயில் குதித்துள்ளனர்.
தினேஷ்குமார், தாமரைச்செல்வன் ஆகிய இரண்டு பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் மரக்கிளையை பிடித்தபடி இருந்த தினேஷ்குமாரை பத்திரமாக மீட்டனர். தாமரைச்செல்வனை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





