--- --:--:-- --

பணநாயகத்தை நிராகரித்து ஜனநாயகத்தை வெல்ல வைத்த மக்களுக்கு கோடான கோடி நன்றி: துரை வைகோ

9

ஊழல், வன்மம், ஆபாசம் மற்றும் அவதூறுகளைத் தவிர்த்து பணநாயகத்தை நிராகரித்து ஜனநாயகத்தை வெற்றி பெற வைத்துள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு ம.தி.மு.க சார்பில் கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

 

வெற்றி பெற்ற இரண்டு தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், பொதுவாழ்வில் வலிமை கூடும் போதெல்லாம் மக்கள் முன் பணிவும் மக்கள் பணியில் துணிவும் வர வேண்டும் என்பதற்கு நூறு விழுக்காடு உதாரணமாக விளங்கும் முதலமைச்சர் விஜய்யின் கரங்களைப் பற்றி அன்பைப் பாராட்டுவதாகவும், அவர்களின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon