இடதுசாரிகளுக்கு மரணமும் இல்லை, தோல்வியும் இல்லை: மு. வீரபாண்டியன்
இடைத்தேர்தல் முடிவுகள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றும், தேர்தல் முடிவுகளைத் தங்களது கட்சி முழுமையாக மதிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஒரு கொள்கை சார்ந்த அரசியலுக்காகத் தொடர்ந்து இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பதிவான வாக்குகள் அனைத்தும் மிகவும் தூய்மையானவை, மாசுபடாதவை என்று பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், எதிர்காலத் தேர்தல்கள் சாதி, மதம் மற்றும் பண பலத்தை முன்னிறுத்தியதாக அமையக் கூடாது என வலியுறுத்திய அவர், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து இடதுசாரிகளின் பலத்தை எடைபோடக் கூடாது என்றும், கம்யூனிஸ்ட் இயக்கம் தத்துவார்த்த ரீதியாக வாழும் இயக்கம் என்பதால் அதற்கு மரணமும் இல்லை, தோல்வியும் இல்லை என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




