இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் காயம்..!
சென்னை மதுரவாயல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் லேசான காயத்துடன் தப்பினார். இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது.
இதில் காரின் முன்பக்க சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் இளைஞர் நல்வாய்ப்பாக பக்கவாட்டில் லேசான காயங்களுடன் தப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





