வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை..!
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சியும் களத்தில் இருப்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஆகவே அவர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குஜராத் மாநிலத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்றும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும்
இளைஞர்களுக்கு மூன்றாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





