மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி..!
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு காவல் நிலையத்தில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இரண்டாம் ஆண்டு படிக்கும் 2 மாணவிகள் மெர்குரி சல்பேட்டை சாப்பிட்டு மயங்கி உள்ளனர்.
அவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் தங்களை தவறாக சித்தரித்து வருவதாகவும் அதனால் இரண்டு பேரும் தற்கொலைக்கு முயன்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால் மருத்துவக் கல்லூரியின் விளையாட்டு விடுதி வார்டன் திட்டியதால் இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். மாணவிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான புகார் அளிக்கப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





