--- --:--:-- --

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது..!

10

கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் ஆபாசமாக பேசுவதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

இதனையடுத்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அவர்களுடன் காவல்துறை உதவி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐந்து மாணவிகளிடம் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடந்த நிலையில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.

 

உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon