--- --:--:-- --

தனது ஆடையை கழித்ததாக எம்பி ஜோதிமணி குற்றசாட்டு..!

8

நேஷனல் ஹெரால்டு முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இதுவரை 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது.

 

விசாரணையில் கேட்கப்பட்ட நூறு கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியாவிடம் நடத்தப்பட்ட மூன்று நாட்களும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக சென்று குடியரசுத் தலைவரை சந்திக்க முயன்றபோது எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் தடையை மீறி குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி செல்ல முற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

 

குண்டுகட்டாக கைது செய்யப்பட்டதோடு காவல்துறையினர் தனது ஆடையை கழித்ததாக எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டினார். பிரியங்கா காந்தி ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon