--- --:--:-- --

பள்ளி சென்று திரும்பிய 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

5

சிவகாசி அருகே பள்ளி சென்று திரும்பிய 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon