இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதி விபத்து..!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பெசன் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்துகொண்டிருந்தார். குமரன் குன்று அருகே அன்னூர் நோக்கி வந்த மினி லாரி திடீரென சாலையின் வலது புறமாக திரும்பிய நிலையில் வாகனத்தின் பக்கவாட்டுப் பகுதியில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சதீஷ் படுகாயமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




